உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை கொலையாளிகளை அழைத்து சென்ற கேரள போலீஸ்

சென்னிமலை கொலையாளிகளை அழைத்து சென்ற கேரள போலீஸ்

ஈரோடு, டிச. 4-சென்னிமலையில், 2022ல் தோட்டத்து வீட்டில் தம்பதியை கொலை செய்து பணம், நகை கொள்ளையடித்த, நீலகிரி மாவட்டம் எருமாட்டை சேர்ந்த முருகன், 32, வீரமணி, 44, ஆகியோரை பெருந்துறை போலீசார் கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர்.இவர்கள் இருவருக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த கொலையில் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது.இதனால் இருவரையும் திருவனந்தபுரம் அழைத்து சென்று விசாரிக்க, கேரள போலீசார் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். இருவரையும் கஸ்டடி எடுப்பதற்கான கடிதத்தை அளித்ததை தொடர்ந்து, இருவரையும் கஸ்டடி விசாரணைக்கு, மாவட்ட போலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை