உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பத்ம கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா

பத்ம கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா

மோகனுார் :மோகனுார் தாலுகா, எஸ்.வாழவந்தி சந்தைப்பேட்டை அருகில், பத்ம கணபதி கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், சுவாமி தரிசனம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி