ரயில்வே ஸ்டேஷனில் திரிந்த ௮ நாய்கள் லபக்
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பிளாட் பார்ம், டிக்கெட் கவுன்ட்டர் உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் சுற்றி திரிந்தன. ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள், தொடர்ந்து புகாரளித்து வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம், ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.இதன் அடிப்படையில் தனியார் அமைப்பு சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாக பகுதியில், நாய்களை பிடிக்கும் பணி நேற்று நடந்தது. இதில் ஏற்கனவே கருத்தடை செய்யப்பட்ட நாய்கள், குட்டி நாய்களை விட்டு விட்டனர். கருத்தடை செய்யப்படாத திரிந்த நாய்களை மட்டும் பிடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் எட்டு நாய்கள் சிக்கின. பிடிபடாமல் தப்பிய நாய்களையும் பிடிக்கும் பணி, நாளையும் (இன்று) தொடரும் என்று ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.