உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கள்ளக்காதலியை கொன்ற கூலி தொழிலாளி கைது

கள்ளக்காதலியை கொன்ற கூலி தொழிலாளி கைது

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், பேசுவதை நிறுத்திக் கொண்டதால் கள்ளக்காதலியை காதலன் மண்வெட்டியால் அடித்து கொலை செய்தார்.புன்செய்புளியம்பட்டியை அடுத்த சொலவனுர் மேடு, அரசாணி மொக்கையை சேர்ந்தவர் ராஜன், 47, கூலி தொழிலாளி. இவரின் மனைவி பாப்பா. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ராணி, 38, பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு ஒரு மகள் உள்ளார். ராஜன், ராணி இடையே பல ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்தது.சமீப காலமாக ராணி, ராஜனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது ராஜன் மண்வெட்டியால், ராணியின் பின்னந்தலை மற்றும் உச்சி மண்டையில் தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராணியை, அக்கம்பக்கத்தினர் தகவலின்படி சென்ற புன்செய் புளியம்பட்டி போலீசார் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிகிச்சை பெற்று வந்த ராணி, நேற்று அதிகாலை இறந்தார். இதை தொடர்ந்து ராஜனை கைது செய்த போலீசார், சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தி கிளை சிறையில் நேற்றிரவு அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்