உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தண்ணீர் லாரி மோதி கூலி தொழிலாளி பலி

தண்ணீர் லாரி மோதி கூலி தொழிலாளி பலி

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டியை அடுத்த பண்ணாடிபுதுாரை சேர்ந்தவர் நாகராஜன், 50, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். புன்செய் புளியம்-பட்டி-பவானிசாகர் நெடுஞ்சாலையை கடந்தபோது, அதிவேக-மாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். தண்ணீர் லாரி டிரைவரான ஜெயபால் மீது, புளியம்-பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ