உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி

சென்னிமலை:சென்னிமலை, எக்கட்டாம்பாளையம், திருமலை நகரை சேர்ந்தவர் நாச்சிமுத்து, 67; பந்தல் தொழிலாளி. சென்னிமலையில் இருந்து வீட்டுக்கு டி.வி.எஸ்.,50ல் நேற்று மாலை சென்றார். சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் கால்நடை மருந்தகம் அருகே சென்றபோது லாரியை முந்த முயன்று நிலைதடுமாறி விழுந்தார். இதில் அவர் தலை மீது லாரி சக்கரம் ஏறியதில் பலியானார். சென்னிமலை போலீசார், லாரி டிரைவரான பொள்ளாச்சி, சூலேஸ்வரம் பட்டியை சேர்ந்த கிளேன்டன், 59, என்பரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி