உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லஞ்சம் கேட்டு 8 மாதமாக அலைக்கழித்த நில அளவையர்; போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்

லஞ்சம் கேட்டு 8 மாதமாக அலைக்கழித்த நில அளவையர்; போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்

குளித்தலை: குளித்தலையில் வீட்டினை நில அளவீடு செய்வதற்காக முறையாக பணம் செலுத்தியும் கடந்த எட்டு மாதங்களாக நிலத்தினை அளக்காமல் இழுத்தடிப்பு செய்து லஞ்சம் கேட்ட நில அளவையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதியவர் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சி மேல சுக்காம்பட்டியை சேர்ந்தவர் விவசாயக் கூலித் தொழிலாளி முதியவர் அர்ஜுனன் (70). இவர் நத்தம் கூட்டு பட்டாவில் உள்ள தனது வீட்டின் இடத்தினை உட்பிரிவு செய்து, தனக்குரிய வீட்டுமனை அளந்து தனிப்பட்டா வழங்குமாறு கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆன்லைன் மூலம் பணம் கட்டியுள்ளார்.இது குறித்து மனுவும் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவையர் அலுவலகத்திலும் தந்துள்ளார். ஆனால் நில அளவையரான பார்த்திபன் நிலத்தினை அளவீடு செய்வதற்கு லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆன்லைன் மூலம் உரிய பணம் கட்டியும் பல மாதங்களாக தனது வீட்டினை அளந்துக்காட்டாமல் நில அளவியல் கேட்ட லஞ்சப்பணம் கொடுக்க முன்வராததால் வேண்டுமென்றே என்னை அலைக்கழித்து வந்த நில அளவையர் பார்த்திபன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று ஜமாபந்தி கடைசி நாளில் முதியவர் அர்ஜுனன், பார்த்திபனை கண்டித்து கழுத்தில் பதாகையை அணிந்தவாறு வட்டாட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுனனிடம் குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அர்ஜூனன் கூறுகையில், 'நான் முன்கூட்டியே புகார் அளித்தும் அமைதிப் பேச்சுவார்த்தையில் நிலத்தினை அளவீடு செய்வதாக கூறினார்கள். ஆனால் அமைதி பேச்சுவார்த்தை நடந்து பல மாதமாகியும் நில அளவையர் பார்த்திபன் இடத்தினை அளவீடு செய்யவில்லை. என்னைப்போல் பலரிடம் புரோக்கர் மூலம் லஞ்சம் கேட்டு இழுத்தடிப்பு செய்து வருகிறார். நில அளவையர் போல் லஞ்சம் கேட்டு செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அவர் கூறினார்.தங்களது இடத்தினை நாளைக்குள் நில அளவையர் பார்த்திபன் அளந்து தருவார் என உறுதி அளித்ததை தொடர்ந்து முதியவர் போராட்டத்தை கைவிட்டார். நிலத்தினை அளவீடு செய்ய நில அளவையர் லஞ்சம் கேட்டதாக முதியவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் வட்டாச்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sitaraman Munisamy
ஜூன் 28, 2024 07:25

அப்போதும் லஞ்சம் கேட்ட நில அளவையர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவர்களுக்கும் பங்கு உண்டு


Gnanasekaran Vedachalam
ஜூன் 27, 2024 12:22

இந்த அதிகாரி TNPSC மூலம் தேர்வு ஆனவர் என்றால் செய்தி உண்மையாக இருந்தால் ஆணையம் மதிப்பு மரியாதை நேர்மை அங்கீகாரம் ஒழுக்கம் விசுவாசம் புகழ் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10 லட்சம் அபராதம் விதிப்பதன் மூலம் தன்னால் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் கண்ணியம் கட்டுப்பாடு கடமை உணர்வை மேம்படுத்தி கையூட்டை அறவே ஒழிக்க முடியும் கால தாமதத்தை தவிர்க்க முடியும் அரசு பணியில் நிர்வாக மேம்பாடு ஏற்பட வழி வகை செய்யும் எனக்கு ஆணையத்தில் தலைவர் பதவி கிடைத்தால் என் தலையாய கடமையாக இதை செய்வேன் ஆனல் எனக்கு வயதின் அடிப்படையில் வாய்ப்பு இல்லை எவ்வளவு நாள் பணி செய்தோம் என்பதை விட எவ்வளவு சிறப்பாக பணி செய்தோம் என்பது அவர் பணியில் சம்பாதித்த மிக பெரிய பொகிஷம்


gopi
ஜூன் 26, 2024 21:45

Useless.


Raghavan
ஜூன் 26, 2024 21:19

எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் இதுதான் திரா விடியா மாடல்


SEENIVASAN
ஜூன் 27, 2024 09:48

எந்த ஆட்சி இருந்தாலும் அதிகாரிகள் திருந்தாத நிலையில்தான் நாடு இருக்கிறது


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை