உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நேரடி தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் ஆக., 1 முதல் 20 வரை நடத்த ஏற்பாடு

நேரடி தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் ஆக., 1 முதல் 20 வரை நடத்த ஏற்பாடு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டில் முதல் நிலை ஊனத்துடன் புதிய நோயாளிகள், குழந்தை நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட சித்தோடு, சென்னிமலை, புளியம்பட்டி, சிவகிரி, திங்களூர் என, 5 வட்டாரங்களில் நேரடி தொழு நோய் கண்டுபிடிப்பு முகாம் வரும் ஆக., 1 முதல், 20 வரை நடக்க உள்ளது.இப்பணியில், 564 முன் களப்பணியாளர்கள், 52 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுகின்றனர். வீடுவீடாக நேரில் சென்று ஆண்களை ஆண் முன் களப்பணியாளர்களும், பெண்களை பெண் முன் களப்பணியாளர்களும் பரிசோதனை செய்வர்.தோலில் சிவந்த, வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல், தோல் தடித்து காணப்படுதல், தோல் பளபளப்பாக, எண்ணெய் பூசியதுபோல இருத்தல், தோலின் மேல் சிறு முடிச்சு கட்டிகள், உணர்ச்சியற்ற தேமலில் முடி உதிர்த்தல், கை, கால் விரல்கள் மடங்கி இருத்தல் என பல்வேறு அறிகுறிகள் தென்படும்.இந்த அறிகுறிகள் இருப்போர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, மருத்துவர்களால் உறுதி செய்து, நோயின் தன்மைக்கு ஏற்ப, 6 மாதம் முதல், 1 ஆண்டு வரை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழுநோயாளிகளின் உடன் இருப்போர், அருகில் வசிப்போர், உடன் பணிபுரிவோருக்கும் தொழுநோய் தடுப்பு மருந்து வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !