உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 12,921 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 22.85 ரூபாய் முதல், 28.69 ரூபாய் வரை விலை போனது. கொப்பரை தேங்காய், 608 மூட்டைகள் வரத்தாகின. ஒரு கிலோ முதல் தரம், 89.69 ரூபாய் முதல், 92.66 ரூபாய்; இரண்டாம் தரம், 66.89 ரூபாய் முதல், 90.69 ரூபாய் வரை விலை போனது. எள் மூட்டை, 22 வரத்தா-னது. கறுப்பு எள் கிலோ, 101.09 ரூபாய் முதல் 146.39 ரூபாய்; சிவப்பு எள் கிலோ, 90.69 ரூபாய் முதல், ௧38 ரூபாய் வரை விலை போனது. மூன்றும் சேர்ந்து, 28.98 லட்சம் ரூபாய்க்கு விற்-றது. * அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நேற்று நடந்த ஏலத்துக்கு, 7,௦௦௦ தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 21.29 - 29.79 ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு, 38 மூட்டை வரத்-தாகி, கிலோ, 74.69 - 94.56 ரூபாய்க்கு விற்றது. எள், 12 மூட்டைள் வரத்தாகி கிலோ, 114.89 - 139.99 ரூபாய் வரை விற்-றது.* பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 3,091 தேங்காய் வரத்தானது. ஒரு காய், ஆறு ரூபாய் முதல் ௧௧ ரூபாய் வரை விற்றது. பத்து மூட்டை நெல் வரத்தாகி ஒரு கிலோ, 20-28 ரூபாய்க்கு விற்றது. 151 மூட்டை நிலக்க-டலை வரத்தாகி, ஒரு கிலோ, 64-71 ரூபாய் வரை ஏலம் போனது. எட்டு மூட்டை எள் வரத்தாகி கிலோ, 93 ரூபாய் முதல், 108 ரூபாய் வரை விற்றது. இரண்டு மூட்டை பச்சைப்ப-யிறு வரத்தாகி கிலோ, 45 ரூபாய் முதல் 55 ரூபாய்க்கு விற்றது. மக்காச்சோளம் ஒரு மூட்டை வரத்தாகி ஒரு கிலோ, 32 ரூபாய்க்கு விலை போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ