மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
20-Jun-2025
சத்தியமங்கலம் பூ சந்தையில், நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 740 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை பூ-240, காக்கடா-225, செண்டுமல்லி- 50, கோழிக்-கொண்டை-50, ஜாதி முல்லை-600, கனகாம்பரம்- 500, சம்-பங்கி-20, துளசி-50, செவ்வந்தி-180 ரூபாய்க்கும் விற்பனையா-னது.* அந்தியூர் புதுப்பாளையம் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்-கத்தில் நடந்த ஏலத்துக்கு, 1,850 வாழைத்தார் வரத்தானது. செவ்-வாழை தார், 1,000 ரூபாய், தேன்வாழை தார், 750 ரூபாய், பூவன் தார், 550, ரஸ்தாளி, 700, மொந்தன், 420, ஜி-9 தார், 550, பச்சை நாடன், 480 ரூபாய்க்கும் ஏலம் போனது. கதலி கிலோ, 24-50 ரூபாய், நேந்திரன் கிலோ, 18-40 ரூபாய்க்கும் விற்றது.* பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், எள் ஏலம் நடந்தது. வெள்ளை எள் கிலோ, 84.19 - 129.59 ரூபாய், சிகப்பு எள் கிலோ, 76.09 - 11௭ ரூபாய், கருப்பு எள், 95.90 - 132.69 ரூபாய்க்கும் ஏலம் போனது. வரத்தான, 454 மூட்டை எள், 33.71 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
20-Jun-2025