உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபட் திருட முயன்றவர் கைது

மொபட் திருட முயன்றவர் கைது

பவானி;அம்மாபேட்டை அருகே தொப்பபாளையத்தை சேர்ந்தவர் வீரமணி, 26; குருவரெட்டியூர் அரசமரத்து வீதி கக்குவா மாரியம்மன் கோவில் அருகே, மொபட்டை நிறுத்தி விட்டு அருகில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வந்த ஆசாமி, மொபட்டை திருட முயன்றபோது, வீரமணி மற்றும் நண்பர்கள் கையும் களவுமாக பிடித்தனர். பர்கூர்மலை கடைரெட்டியை சேர்ந்த கணேசன், 40, என்பது தெரிந்தது. அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி