கோவில் பொருட்களை சேதப்படுத்தியவர் கைது
கோபி, கோவில் பொருட்களை சேதப்படுத்தியதாக, முதியவரை போலீசார் கைது செய்தனர்.கோபி அருகே அம்பிகை நகரை சேர்ந்தவர் சண்முகம், 47. கட்டட பொருள் விற்பனையாளர்; இவர் அதே பகுதி பூங்காவில் உள்ள, விநாயகர் கோவிலுக்கு பொருளாளராக உள்ளார். கோவில் அருகே குடியிருக்கும் கணேசன், 65, என்ற முதியவர், கோவிலில் நடக்கும் பூஜை மற்றும் விழா சமயங்களில் ஏற்படும் சப்தம், தனக்கு இடையூறு ஏற்படுவதாக பிரச்னை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை, 31ல், கோவிலின் துளசி மடம், தீப மடம் என கோவில் பொருட்களை சேதப்படுத்தி, கணேசன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, சண்முகம் கோபி போலீசில் புகாரளித்தார். இதன்படி கணேசனை, கோபி போலீசார் நேற்று கைது செய்தனர்.