மேலும் செய்திகள்
அனுமதியின்றி 'ட்ரோன்' பறக்க விட்டவருக்கு அபராதம்
13-Mar-2025
அந்தியூர்: பர்கூர்மலையில், தட்டகரை வனப்பகுதியில், கர்கேகண்டி கிழக்கு பீட், பசுவேஸ்வரன் கோவில் வனப் பகுதியில், நேற்று மதியம் தட்டகரை ரேஞ்சர் ராமலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் ரோந்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வனத்தில் காய்ந்திருந்த புற்களுக்கு ஒருவர் தீ வைத்துக் கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், பர்கூர் வேலாம்பட்டியை சேர்ந்த மாதேவன், 38, என்பது தெரிந்தது. காய்ந்த புல்லில் தீ வைத்தால், மீண்டும் புல் முளைக்கும் என்பதற்காக தீ வைத்ததாக கூறியுள்ளார். அவரை கைது செய்த வனத்துறையினர், பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
13-Mar-2025