கட்டுமான பொருட்களை திருட முயன்றவர் கைது
அந்தியூர்: ராமநாதபுரம் மாவட்டம், திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், 36. இவர், அந்தியூர் - வெள்-ளித்திருப்பூர் சாலையில், பெரிய ஏரி கிழக்கு கடை அருகே பாலம் கட்டும் பணியை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். நேற்று காலை பாலமுருகன் பாலத்தை பார்வையிட சென்ற போது, அங்கே ெஹவி டியூட்டி பைக்கில், பாலம் கட்ட பயன்ப-டுத்தப்படும் நான்கு ஷட்டர், இரண்டு இரும்பு பைப்புகளை திருட முயன்றவரை பிடித்து விசாரித்தனர். இதில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், 28, என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். அந்-தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.