மேலும் செய்திகள்
இன்றும், நாளையும் 80 சிறப்பு பஸ்கள்
10-Oct-2026
ஈரோடு:ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சோலார் பஸ் ஸ்டாண்ட்டுக்கு அரசு நகர பஸ் நேற்று மதியம் சென்றது. ஈரோடு - கரூர் சாலை, மாணிக்கவாசகர் காலனி பகுதியில் சென்றபோது, பஸ்ஸில் இருந்த ஆண் ஒருவர் தவறி சாலையில் விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சுய நினைவை இழந்தார். ஈரோடு தாலுகா போலீசார் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு, 45 வயது இருக்கும். கூலி தொழிலாளி என்பது மட்டும் தெரியவந்தது. பிற விபரங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Oct-2026