உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மே தின விழா கொண்டாட்டம்

மே தின விழா கொண்டாட்டம்

கோபி:கோபியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், வடக்கு மாவட்ட கட்சி ஆபீசில், மே தின கொடியேற்று விழா நேற்று நடந்தது.கோபி ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். *மே தினத்தை முன்னிட்டு, சென்னிமலையில் அண்ணா சுமைதூக்குவோர், ஆட்டோ மற்றும் கைவண்டித் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், அண்ணா தொழிற் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் மே தின விழா மற்றும் பேரணி நடந்தது. முன்னாள் அமைச்சர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.,நட்ராஜ், சென்னிமலை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் ரமேஷ், உள்ளிட்ட அண்ணா தொழிற் சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.* இ. கம்யூ., கட்சி சார்பாக நடந்த மே தின விழாவில் ஏ.ஐ.டி.யு.சி., சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சங்க தலைவர் பொன்னுசாமி சால்வை அணிவித்து பாராட்டினார். * வெள்ளகோவில் உப்புபாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வெள்ளகோவில் நகர தி.மு.க., செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., விசைத்தறி தொழிற்சங்க தலைவர் தம்பிதுரை வரவேற்றார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பத்மநாபன், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கொடியேற்றி வைத்து பேசினர்.*அந்தியூர் ரவுண்டானா அருகே, நேற்று, தந்தை பெரியார் சுமை தூக்குவோர் சங்கம் சார்பில், மே தின விழா கொண்டாடப்பட்டது. எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், கொடியேற்றி வைத்து பச்சை துண்டுகளை தொழிலாளர்களுக்கு அணிவித்தார்.*மே தினத்தை முன்னிட்டு பா.ம.க., சார்பில் ஈரோட்டில் மே தின ஊர்வலம் நடந்தது. ஈரோடு சி.என். கல்லுாரியில் ஊர்வலம் துவங்கியது. ஸ்வஸ்திக் கார்னர், எல்லை மாரியம்மன் கோவில், மஜித் வீதி, மணிக்கூண்டு வழியாக ஈஸ்வரன் கோவில் வீதியை அடைந்தது. ஈரோடு மாவட்ட செயலாளர் ராஜூ தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை