திருவோடு ஏந்தியபடி வந்துபஞ்., உறுப்பினர் ராஜினாமா
கோபி, டிச. 21-கோபி அருகே எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ராஜகுரு, 37; கோபி யூனியன் சவுண்டப்பூர் பஞ்சாயத்து ஆறாவது வார்டு சுயேட்சை உறுப்பினர். நேற்று கையில் திருவோடு ஏந்தியபடி, கோபி யூனியன் அலுவலகத்துக்கு வந்தார். தனது பதவியை ராஜினாமா செய்வதாக, பி.டி.ஓ., பிரேம்குமாரிடம் கடிதம் கொடுத்தார்.பிறகு அவர் கூறியதாவது: சவுண்டப்பூர் பஞ்.,ல் சாக்கடை வசதியில்லை. மழை காலங்களில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எஸ்.கணபதிபாளைத்தில், 300 வீடுகளுக்கு பட்டா இல்லாமல், அரசு வழங்கும் இலவச வீடுகளை கட்ட முடியாமல், குடிசை வீடுகளில் மக்கள் மழைக்காலங்களில் அவதியுறுகின்றனர். அதேபோல், 500 வீடுகள் வக்பு வாரியத்தில் உள்ளது. இப்பிரச்னைகளை அரசு கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து அனைத்து கிராம சபையிலும் மனு கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.