உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் ஆய்வு
காங்கேயம் காங்கேயம் யூனியன் படியூரில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது.தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்து, மக்களிடம் கோரிக்கை மனு பெற்றார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், முகாமில் பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவானந்தன், மாவட்ட அமைப்புசார ஓட்டுநர் அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.