உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய எம்.எல்.ஏ.,

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய எம்.எல்.ஏ.,

பவானி, டிச. 29-வெள்ளித்திருப்பூரை அடுத்த எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் துவக்கி வைத்தார். இதில் இ.சி.ஜி., சக்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் சிகிச்சை, மகப்பேறு, எலும்பு முறிவு உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டு மாத்திரை வழங்கினர். நுாற்றுக்கணக்கானோர் பயன் பெற்றனர். கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும் எம்.எல்.ஏ., வழங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், டாக்டர் சதீஸ்குமார் உட்பட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ