உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நவீன கருவிகள், பிற வசதிகள் துவக்கி வைப்பு

பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நவீன கருவிகள், பிற வசதிகள் துவக்கி வைப்பு

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், கிழக்கு எம்.எல்.ஏ., சந்திர-குமார் தொகுதி நிதி, 40 லட்சம் ரூபாயில் கருவிகள், பிற வச-திகள் துவக்க நிகழ்ச்சி நடந்தது. காத்திருப்பு கூடம், துணி உலர்த்தும் களம், 9.96 லட்சத்தில் என்டாஸ்கோபி, 92,000 ரூபாயில் பொது கழிவுகள் சேகரிக்கும் களம், 5.85 லட்சத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர், 4.81 லட்சம் ரூபாயில், ஆட்டோமெடிக் பயோ கெமிஸ்டரி அனாலைசர், 2 ஏ.சி., இயந்திரங்கள் போன்றவை-களின் செயல்பாடுகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்து-சாமி துவக்கி வைத்தார்.இங்கு அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்-சிளம் குழந்தைகள் பிரிவு, பொது மருத்துவ பிரிவு, இருதயவியல் சிகிச்சை பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு செயல்படுகி-றது.இக்கூடுதல் வசதி மூலம், நோயாளிகள், உடன் வருவோர் பயன் பெறுவர் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி