உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சர்வீஸ் சென்டரில் பணம் திருட்டு

சர்வீஸ் சென்டரில் பணம் திருட்டு

ஈரோடு:ஈரோடு, பெரிய சேமூர் சுக்கிரமணிய கவுண்டன் வலசை சேர்ந்தவர் ஜீவா, 34. கருங்கல்பாளையம் காவிரி சாலை ராயல் விங்ஸ் ஹோண்டா சர்வீஸ் சென்டரில், 10 ஆண்டுகளாக கிளை பொறுப்பாளராக பணிபுரிகிறார். கடந்த, 21 இரவு 7:30 மணிக்கு வேலை முடிந்து, சர்வீஸ் சென்டரை மூடி விட்டு சென்றார். மறுநாள் காலை, 8:15 மணிக்கு வந்தபோது, சர்வீஸ் சென்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயரின் பூட்டை உடைத்து, 10,500 ரூபாய் திருடப்பட்டுள்ளது. கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை