உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எலக்ட்ரிக் பஸ் மோதியதில் மொபட்டில் சென்றவர் பலி

எலக்ட்ரிக் பஸ் மோதியதில் மொபட்டில் சென்றவர் பலி

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த குள்ளாய்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 45; தாராபுரம் நோக்கி டி.வி.எஸ்., மொபட்டில் நேற்று மாலை, 6:45 மணியளவில் சென்றார். காங்கேயம் பிரிவு அருகே, தென்காசியை சேர்ந்த சுரேஷ், 30, ஓட்டி வந்த எலக்ட்ரிக் பஸ், மொபட் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட சீனிவாசனை, அப்பகுதி மக்கள் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. தாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி