உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுத்தியலால் அடித்து தாய் கொலை

சுத்தியலால் அடித்து தாய் கொலை

சென்னிமலை: வெள்ளோடு அருகே சொத்து தகராறில், தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்த மகனை, போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டை அடுத்த முகாசி அனுமன்பள்ளியில் மாகாளியம்மன் கோவில் பகுதியில் வசித்தவர் தனபாக்கியம், 55, வேமாண்டாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர். இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி காங்., கட்சி பொறுப்பாளர். இவரும் வேமாண்டாம்பாளையம் ஊராட்சி தலைவராக இருந்தவர். இந்த தம்பதியின் இரண்டாவது மகன் சந்தோஷ் ராஜா, 40, மனைவியிடம் விவாகரத்து பெற்ற நிலையில், பெற்றோருடன் வசிக்கிறார். எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்தவர், சொத்தை பிரித்து கொடுக்குமாறு, தாயிடம் தகராறு செய்தார். மறுத்து பேசிய தாயின் தலையில் சுத்தியலால் தாக்கியதில் இறந்தார். இதை பார்த்து தந்தை கிருஷ்ணமூர்த்தி சத்தமிடவே, பைக்கில் ஏறி தப்பி விட்டார். வெள்ளோடு போலீசார் தனபாக்கியம் சடலத்தை மீட்டு , பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ் ராஜாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை