தடுப்புச்சுவரில்லாத வாய்க்கால் பாலம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ஈரோடு :ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அக்ரஹாரம் பேரேஜ் அருகில் கரைகளை தொட்டு தண்ணீர் செல்கிறது. வாய்க்காலின் குறுக்கே போக்குவரத்துக்கு கட்டப்பட்டுள்ள பாலம் வழியாக தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. பாலத்தின் பக்கவாட்டு தடுப்புக்கம்பி முற்றிலும் உடைந்து உள்ளது. இதனால் இரவில் இவ்வழியாக செல்வோர் பெரும் விபத்து அபாயத்தில் உள்ளனர். வாகனத்துடன் யாரேனும் வாய்க்காலில் பாயும் முன் தடுப்புச்சுவர் அல்லது தடுப்புக்கம்பி அமைக்க மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.