மூதாட்டி மாயம் போலீசார் வழக்கு
மூதாட்டி மாயம்போலீசார் வழக்கு ஈரோடு, நவ. 21-ஈரோடு, 46 புதுார் சஞ்சய் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி விஜயலட்சுமி, 65. கடந்த சில தினங்களாக, இரவு நேரத்தில் துாக்கம் வராததால், கருங்கல்பாளையம் காவேரிக்கரை பகுதி யில் உள்ள மசூதியில், கயிறு கட்டுவதற்காக விஜயலட்சுமி அவரது கணவருடன் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த, 15ல் சென்ற போது, அங்கிருந்த விஜயலட்சுமி மாயமானார். அக்கம்பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. விஜயலட்சுமி மகள் மாலதி அளித்த புகார்படி, கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.