உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நம்பியூர் அரசு கல்லுாரியில் இன்று முதல் நேரடி சேர்க்கை

நம்பியூர் அரசு கல்லுாரியில் இன்று முதல் நேரடி சேர்க்கை

நம்பியூர்: நம்பியூர் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், இன்று முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. நடப்பு, 2024-25ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை, இணைய-வழியில் விண்ணப்பித்தோருக்கும் மட்டும் நடந்தது. இணைய வழியில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி சேர்க்கை நடக்கிறது. கலை அறிவியல் கல்லுாரியை அணுகி, உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து முதலாமாண்டு படிப்பில் சேரலாம். இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதவியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளியல் பிரிவுகளில் காலி-யிடம் உள்ளது. விரும்பும் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்ந்து கொள்ள, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ