முதல்வர் கோப்பை பீச் வாலிபாலில் நம்பியூர் குமுதா பள்ளிக்கு 3 பதக்கம்
ஈரோடு, மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் கோப்பை பீச் வாலிபால் போட்டி, நாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் மாணவியர் பிரிவில், நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி மாணவியர் முதலிடம் மற்றும் மூன்றாமிடம் பிடித்தனர். இதன் மூலம் பரிசுத்தொகையாக, 1.50 லட்சம் ரூபாயுடன் தங்க பதக்கம், 50 ஆயிரம் ரூபாயுடன் வெண்கல பதக்கமும் கிடைத்தது. மாணவர் பிரிவில் இதே பள்ளி இரண்டாமிடம் பெற்று, வெள்ளி பதக்கத்துடன், 1 லட்சம் ரூபாய் பரிசை வென்றது. மூன்று பதக்கங்கள், மூன்று லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வென்ற பள்ளி மாணவ, மாணவியரை, ஈரோடு கலெக்டர் கந்தசாமி பாராட்டி பரிசு வழங்கினார். சி.இ.ஓ., சுப்பாராவ், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கேசவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ரவிக்குமார், மாவட்ட உடற்கல்வி கல்வி ஆய்வாளர் சாலமன், பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, பள்ளி செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி மற்றும் உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டினர்.