உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அஞ்சல் துறை சார்பில் தேசிய கடித போட்டி

அஞ்சல் துறை சார்பில் தேசிய கடித போட்டி

ஈரோடு: அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடித போட்டி, 'எழுதும் மகிழ்ச்சி; டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் போட்டி நடக்க உள்ளது.தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என ஏதாவது ஒரு மொழியில், 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600002' என்ற முகவரிக்கு எழுத வேண்டும். உறையின் மேல், 'Dai Akhar அஞ்சல் துறை கடித போட்டி-2023-24' என்ற குறிப்பிட வேண்டும். இக்கடிதத்தை வரும், டிச., 14க்குள் அனுப்ப வேண்டும்.போட்டிகள், 4 பிரிவில் நடக்கும். 18 வயது வரை பிரிவில், 'உள்நாட்டு அஞ்சல் அட்டை பிரிவு, அஞ்சல் உறை பிரிவு' என்றும், 18 வயதுக்கு மேற்பட்டோர், 'உள்நாட்டு அஞ்சல் அட்டை பிரிவு, அஞ்சல் உறை பிரிவு' என்றும் அனுப்ப வேண்டும். அஞ்சல் உறை பிரிவில், 'ஏ4' அளவு வெள்ளை தாளில், 1,000 வார்த்தைக்குள் எழுத வேண்டும். உள் நாட்டு அஞ்சல் அட்டை பிரிவில் எழுதுவோர், 500 வார்த்தைக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் மட்டுமே எழுத வேண்டும்.வெற்றி பெறுவோருக்கு மாநில அளவில் முதல், 3 பரிசாக, 25,000 ரூபாய், 10,000 ரூபாய், 5,000 ரூபாய் வழங்கப்படும். தேசிய அளவில் முதல், 3 பரிசாக, 50,000 ரூபாய், 25,000 ரூபாய், 10,000 ரூபாய் வழங்கப்படும்.வயது ஆதாரமாக தங்கள் கடிதத்தில், கடந்த ஜன., 1ல் கணக்கில், 'I certify that I am below the age of 18' அல்லது 'above the age of 18' என குறிப்பிட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பின் வயது சான்று சரி பார்க்கப்படும். மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் தலை சிறந்த, 3 கடிதங்கள் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு பரிசு வழங்கப்படும். இந்திய அளவிலான பரிசு பெறும் கடிதம் விபரம் பின் அறிவிக்கபப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை