உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு

பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு

அந்தியூர் :அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில், இரண்டடுக்கு வகுப்பறை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். பள்ளியில் நடந்த நிகழ்வில் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதை தொடர்ந்து அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் மையத்தில் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேவைக்காக வரும் மாணவ, மாணவியர், பொதுமக்களை காக்க வைக்காமல், உடனுக்குடன் பணியை முடித்து கொடுக்குமாறு, அங்கிருந்த ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதை தொடர்ந்து கெட்டிசமுத்திரம் பஞ்., ஆதிரெட்டியூரில், புதிய மின்மாற்றியை இயக்கி துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி