உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மோசடியில் புதுசு; ஏமாற்றத்துக்கு பழசு

மோசடியில் புதுசு; ஏமாற்றத்துக்கு பழசு

காங்கேயம்:நவீன யுகம் நான்கு கால் பாய்ச்சலில் செல்கிறது. இதற்கு ஏற்றார் போல் மோசடியும் பல்வேறு வகைகளில் அதிகரித்து வருகிறது. பொழுதை வீணடிக்கும் சமூக வலைதளங்கள், மோசடி நபர்களுக்கும் பல்வேறு வகைகளில் கை கொடுக்கிறது. அந்த வகையில் காங்கேயத்தை சேர்ந்த ஒருவர், கேரள லாட்டரி நிறுவனத்தால் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார். காங்கேயத்தை சேர்ந்த ஒருவர் பேஸ்புக் விளம்பரத்தை பார்த்து, கேரளாவில் உள்ள பி.கே.லாட்டரி நிறுவனம் எனக்கூறிய கேவினேஷ் என்பவரிடம், ஆறு மாதமாக வாட்ஸ் ஆப்பில் லாட்டரி நெம்பர்களை தேர்வு செய்து, கூகுள் பேவில் பணம் செலுத்தி வந்தார். கடந்த, 16ம் தேதி ஒரு செட் என கூறப்படும், 12 ஸம்ருத்தி லாட்டரி சீட்டுகளை, 580 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இதற்கு நான்காவது பரிசாக, 5,000 ரூபாய் வீதம் 12 சீட்டுகளுக்கு, 60 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைத்தது. விற்பனை செய்த நபரை தொடர்பு கொண்டபோது, மொபைல் அழைப்பை துண்டித்துள்ளார். மேலும் லாட்டரி அனுப்பிய வாட்ஸ்ஆப் பதிவுகளையும் டெலிட் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர், லாட்டரி வாங்கிய காங்கேயம் ஆசாமி, கேரளா மாநிலம் பாலக்காடு சென்று பி.கே.லாட்டரி நிறுவனத்தை தேடினார். அப்படி ஒரு நிறுவனமே இல்லாதது தெரிய வந்தது. டெக்னாலஜி காலத்தில் இன்னும் என்னவெல்லாம் மோசடி நடக்கப் போகிறதோ?. மோசடியில் இது புதுசு என்றாலும், ஏமாற்றத்துக்கு பழசு தானே?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ