உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் கைது

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் கைது

ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமையில், காலவரையற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல், ஈரோடு தாலுகா அலுவலக வளா-கத்தில் நடந்தது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் விஜயமனோ-கரன், வருவாய் துறை அலுவலர் சங்கம் ரமேஷ் உட்பட பலர் பேசினர்..கடந்த, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையில் வரிசை எண், 313ல் குறிப்பிட்டபடி சத்துணவு ஊழியர்களுக்கு கால-முறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், 7,850 ரூபாயாக வழங்க வேண்டும். பணிக்கொடையாக அமைப்-பாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய், சமையலர், உதவியாளர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் என வழங்கி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும், என வலியுறுத்தினர். திருமகன் ஈவெரா சாலையில் மறியலில் ஈடுபட்ட, 71 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை