மேலும் செய்திகள்
பகவதியம்மனுக்கு சிறப்பு பூஜை
09-Apr-2025
கிருஷ்ணராயபுரம்:சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந்து பக்தர்கள் சார்பில், அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அலங்கார வாகனங்களில் பல்வேறு வகையான மலர்களுடன், திருவீதி உலாவாக கொண்டு வந்து மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜை செய்தனர்.சிந்தலவாடி, லாலாப்பேட்டை, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், மேட்டு மகாதானபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அம்மனை வழிப்பட்டனர். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
09-Apr-2025