உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளிக்கு பாட்டில் அடி ஒருவர் கைது; ஒருவர் ஓட்டம்

தொழிலாளிக்கு பாட்டில் அடி ஒருவர் கைது; ஒருவர் ஓட்டம்

டி.என்.பாளையம், பங்களாபுதுாரை அடுத்த கொண்டயம்பாளையத்தை சேர்ந்தவர் ராக்கன், 47, விவசாய கூலி தொழிலாளி. காடையாம்பாளையம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்வுக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது அங்கு அவரது மகன் மணிகண்டனும், அதே ஊரை சேர்ந்த ரத்தினவேல், 36, என்பவரும் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதை பார்த்த ராக்கன் தட்டிக்கேட்டபோது, ரத்தினவேல் பாட்டிலால் தாக்கியுள்ளார். கார்த்தி என்பவர் கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். ராக்கன் புகாரின்படி பங்களாபுதுார் போலீசார் வழக்குப்பதிந்து, ரத்தினவேலை கைது செய்தனர். தலைமறைவான கார்த்தியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை