ஜாதி பெயர் நீக்கம் குறித்து வரும் 30ல் கருத்து கேட்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், பஞ்.,கள், குக்கிராமங்களில் சாலை, தெருக்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை பரிசீலித்து, ஜாதி பெயர்களை நீக்கம் செய்து, புதிய பெயர்களை கலெக்டர், பஞ்., ஆய்வாளர் மூலம் மாவட்ட அரசிதழில் வெளியிட வேண்டும். இதற்காக வரும், 30ம் தேதி காலை, 11:00 மணிக்கு அனைத்து பஞ்.,களிலும் கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளது. அந்தந்த பகுதி மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஜாதி பெயர் மாற்றம் குறித்து எழுத்து மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது கருத்துக்-களை வழங்கலாம்.