உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விடுபட்ட பகுதிக்கு ஊராட்சிகோட்டை குடிநீர்; அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

விடுபட்ட பகுதிக்கு ஊராட்சிகோட்டை குடிநீர்; அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட, மாநகராட்சி பகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது ஆரத்தி எடுத்து அவருக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர்.வாக்காளர்களிடம் அசோக்குமார் பேசியதாவது: மாநகராட்சி பகுதியில், 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை சீரமைக்கப்பட்டது. ஊராட்சிகோட்டை கூட்டு குடிநீர் திட்டம் மாநகர பகுதிக்காக வடிவமைக்கப்பட்டு, தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.வளர்ந்து வரும் மாநகராட்சி என்பதால், உள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சாலை, சாக்கடை வடிகால் வசதி, பாதாள சாக்கடை அமைப்பில் விடுபட்ட பகுதிகளை இணைத்து பணி செய்தல், விடுபட்ட பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், சுகாதாரப்பணி மேம்படுத்த வேண்டி உள்ளது.போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் வகையில், மையங்கள் அமைக்கப்படும். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ரூத் திட்டத்தில் கூடுதல் வளர்ச்சி திட்டப்பணிகள், செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மஞ்சள், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்கள் அதிகம் விளைவிக்கப்படுவதால், அவற்றை சந்தைப்படுத்தவும், மதிப்பு கூட்டிய பொருளாக்கி விற்பனை செய்ய, ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வேன். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மக்களை சந்தித்து, குறை, தேவை கேட்டறிந்து செயல்படுத்துவேன். எளிய வழியில் என்னை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு பேசினார். அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ