அமித் ஷாவை கண்டித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்: சட்டமேதை அம்பேத்கரை, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்து விட்டதாக கூறி, வி.சி., - காங்., மற்றும் தி.மு.க., கட்சிகள் சார்பில், தாராபுரத்தில் நேற்று தனித்தனியே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய நகராட்சி அலுவலகம் அருகே, வி.சி., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்முத்து தலைமை வகித்தார். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாலையில் காங்., சார்பில், திருப்பூர் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகிளா காங்., மாநில நிர்வாகி கானப்ரியா முன்னிலை வகித்தார். இதை தொடர்ந்து தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் தலைமையில், நகர செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி கோஷமிட்டனர்.