உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டீசல் டியூப் வெடித்து அரசு பஸ் பழுது தாளவாடி அருகே பயணிகள் தவிப்பு

டீசல் டியூப் வெடித்து அரசு பஸ் பழுது தாளவாடி அருகே பயணிகள் தவிப்பு

சத்தியமங்கலம்: தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு, 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன், ஒரு அரசு பஸ் நேற்று மதியம், 3:00 மணிய-ளவில் சென்றது. கும்பாரகுண்டி பகுதியில் டீசல் டியூப் வெடித்து பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் மணிக்க-ணக்கில் காத்திருந்து, அந்த வழியாக வந்த மற்ற பஸ்களில் ஏறி சென்றனர். நேற்று முன்தினம் இரவு, திம்பம் மலைப்பாதையில் பஸ் பஞ்சராகி பயணிகள் தவித்தனர். மறுநாளே இந்த சம்பவம் நடந்துள்ளது. தாளவாடிமலைக்கு தரமான பஸ்களை இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பய-ணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை