உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேட்டியா பொதுக்குழு கூட்டம்

பேட்டியா பொதுக்குழு கூட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்கள் கூட்டமைப்பின், 26வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் முருகானந்தம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். துணை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில், ௬ சதவீத மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இ.எஸ்.ஐ., மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் அமைக்க வேண்டும். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்லும் நேரத்தை அதிகரித்து, கூடுதலாக இரண்டு பிளாட்பார்ம் அமைக்க வேண்டும். காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து திண்டல் மேடு வரையில் மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை பணி துவங்கவில்லை. விரைவில் பாலம் அமைக்கும் பணியை துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி