உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாநகராட்சியில் குட்டிகளுடன் திரியும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி

ஈரோடு மாநகராட்சியில் குட்டிகளுடன் திரியும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி

ஈரோடு ;ஈரோடு மாநகராட்சியில் தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து வருவதாக கூறும் நிலையில், குட்டிகளுடன் நாய் உலா வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாநகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண் டும். இரவில் மட்டுமின்றி பகலிலும் கூட வெளியே செல்ல முடியாத அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது மக்கள் குற்றச்சாட்டாக உள்ளது. மாநகராட்சியும் தனியார் அமைப்புடன் இணைந்து, தெரு நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வருகிறது. ஆனாலும், எண்ணிக்கை குறைந்ததாக தெரிவில்லை.தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததாக மாநகராட்சி ஒருபுறம் தெரிவித்து வரும் நிலையில் தெரு நாய்கள் ஆங்காங்கே குட்டிபோட்டு குடும்பமாக சாலைகளில் சுற்றி திரிகின்றன. குறிப்பாக வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதி, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், இந்த காட்சியை காண முடிகிறது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: தெரு நாய்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் குடும்ப கட்டுப்பாடு செய்ததாக கூறினாலும், குட்டிகளுடன் நாய்கள் சுற்றித்திரிவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இனியேனும், தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

dhamo tester
மே 28, 2025 17:11

பொதுமக்கள் பாரபட்ச மனப்பாங்கு – தெருநாய்கள் மீது வெறுப்பு, மனித வன்முறையைப் புறக்கணிப்பு ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் மற்றும் அதன் குட்டிகள் சாலைகளில் சுற்றித் திரிவதை கண்டதும் சிலர் அதிர்ச்சி அடைகிறார்கள் என்று தினமலர் செய்தி சொல்கிறது. ஆனால், இந்தத் தெருநாய்கள் உணவின்றி, பாதுகாப்பின்றி தவிக்கும் நிலையை யாரும் பார்க்க விரும்பவில்லை. அதே சமயத்தில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் செய்தி வந்தால், அதில் சிலரின் கவனம் கூட செலுத்தப்படாது. பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்முறைகள், பாலியல் தவறுகள், குடும்பங்கள் வெடிக்கும் அளவிற்கு செல்வும் சமாதானமும் அழிந்து போகும் மதுவிலக்கு பிரச்சனைகள் — இவை அனைத்தும் இந்த சமூகத்தில் இரண்டாம் தர கவனத்துக்குப் போகின்றன. தெருநாய்கள் மீது மட்டும் கோபம், பயம், வெறுப்பு. ஆனால் இந்த மனித சமூகத்தில் நடைபெறும் கொடூரங்கள் குறித்து முழுமையாக பொற்குறிக்கவும் செய்யாமல், சமுதாயம் அமைதியாக தவிர்க்கிறது. எவ்வளவு பாரபட்சம் இது? தெருநாய்கள் சாலையில் வந்தாலே ஆத்திரம் ஆனால் சாலை விபத்தில் ஒருவர் இறந்தால் அதை ‘சாதாரணம்’ என ஆளும் மக்கள் பார்க்கிறார்கள். ஒரு மரம் வெட்டப்படும் போது, வெயில் தாக்கம் அதிகரித்து பலர் துன்பம் அனுபவிக்கிறார்கள். ஆனால், மரங்களை பாதுகாக்கும் ஆர்வம் பொதுமக்களில் காணப்படுவதில்லை. தெருநாய்கள் மீது மரியாதை இல்லாத கோபம் காட்டும் மக்கள், ஊர் வளர்ச்சி என்ற பெயரில் மரங்களை அழிக்கும் திட்டங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். தெருநாய்களுக்கு ஒரு முழுமையான உணவு கிடைக்கவில்லை. ஆனால், மனிதன் இன்றும் ஒரு பசிக்கெடுக்கும் உயிரின் மீது கூட அன்பு காட்ட மறுக்கிறான். சமுதாயத்தில் மாற்றம் வர வேண்டுமென்றால்: தெருநாய்கள் தவிர்க்க வேண்டியவையல்ல. அவற்றும் உயிர்கள். அவற்றிற்கும் உணவு, நீர், இடம் தேவைப்படுகிறது. மனித வன்முறைகளுக்கு எதிராக உரக்க பேச வேண்டும். பாலியல் குற்றவாளிகள் மீது மட்டும் கோபம் காட்டாமல், சமூகத்தில் ஏற்படும் ஒவ்வொரு அநியாயத்துக்கும் எதிராக நாம் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும். மரங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வும், குடிநீர், வெப்பநிலை பற்றிய கவலையும் வளர்த்தே தீர வேண்டும். மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற நாம் முன்வர வேண்டும். தெருநாய்களுக்கு எதிரான கோபத்தை மனித வன்முறைகளுக்காக மாற்றுங்கள். தெருநாய்கள் வீட்டுக்கு முன் இருந்தாலே பயம் என நினைக்கிறார்கள் — ஆனால் அந்த நாய்கள் தான் ராத்திரியிலும் விழித்திருந்து திருடர்கள் வந்தால் சீறி அறிவிக்கும் பைரவன்கள். பகுப்பாய்வு மற்றும் தவறுகள்: தெருநாய்கள் பிணையுடன் சுற்றுவது இயற்கையான விஷயம். அவை பாதுகாப்புக்காகவும், உணவுக்காகவும் சுற்றுகின்றன. ஆனால் இதனை ஒரு "அச்சுறுத்தலாக" சித்தரிப்பது தவறானது. நகராட்சி நிர்வாகம் தெருநாய்களின் குடிசைமனை, உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவில்லை என்பதே பெரிய குற்றச்சாட்டு. அதன் விளைவாக அவை வழியற்று அலையும் நிலையில் உள்ளன. உணவின்றி, நீரின்றி, வெயிலில் நசிந்து கிடக்கும் தெருநாய்களின் வேதனையைப் பற்றி மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள், ஆனால் அவற்றை ஒழிக்கவேண்டும் என கோஷமிடுகிறார்கள் — இது பெரும் மனநிலை குறைபாடு தெருநாய்கள் உங்கள் எதிரிகள் அல்ல. உங்கள் உணர்வுகளுக்குத் தக்க விலாசமல்ல. உண்மை விரோதிகள் – சமூக அநீதியையும் மனித புறக்கணிப்பையும் அடையாளம் காணுங்கள். தெருநாய்கள் – மனிதனின் உண்மையான தோழர்கள்: உணவின்றி அலையும் தெருநாய்கள் மீது பாசத்தையும், கருணையையும் காட்டுங்கள். அவை கடமையுள்ள காவலர்களாக இருக்கின்றன — பசிக்காகவே சுற்றும் அதிர்ச்சியான நிலைமை இவர்களின் தவறல்ல. இந்த பூமியில் வாழ்வதற்கு அவைக்கும் உரிமை உண்டு. மனிதமோடல்லாமல், மனிதநேயத்தோடும் வாழுங்கள். முடிவுரை: தெருநாய்கள் மீது காட்டும் வெறுப்பை விட, மனிதத்தன்மை இழந்த மனிதர்களின் செயல்கள் குறித்து நாம் மேலோங்கி பேச வேண்டிய நேரம் இது. உண்மையான சமூக மாற்றம் அவ்வளவுதான் — ஒரு தாயாக நம் பூமி எல்லா உயிர்களையும் சமமாக பார்ப்பதில்தான் உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை