உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோசணத்தில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

கோசணத்தில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

நம்பியூர், நம்பியூர் அருகே கோசணம் ஊராட்சி, பருத்திக்காட்டு மேடு பகுதியில் கடந்த, 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் தவித்துப்போன மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், பருத்திக்காட்டு மேடு பஸ் நிறுத்தத்தில், கொளப்பலுார்-நம்பியூர் சாலையில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நம்பியூர் போலீசார், வருவாய் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாளை (இன்று) மதியத்துக்குள் குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதியளிக்கவே, மக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ