உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு நிலத்தில் குடிசை அமைக்க திரண்ட மக்கள் இலவச பட்டா கிடைக்காததால் ஆவேசம்

அரசு நிலத்தில் குடிசை அமைக்க திரண்ட மக்கள் இலவச பட்டா கிடைக்காததால் ஆவேசம்

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அருகே இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், அரசு புறம்-போக்கு நிலத்தில், குடிசை அமைக்க திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.புன்செய் புளியம்பட்டி அருகே மாதம்பாளையம் பஞ்.,கணக்கர-சம்பாளையம், மாராயி பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்க-ணக்கான மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சத்தி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். பல ஆண்டுகளாகியும் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட, 100க்கும் மேற்-பட்டோர் கணக்கரசம்பாளையம் மொக்கை அருகே அரசு புறம்-போக்கு நிலத்தில் குடிசை அமைக்க நேற்று திரண்டனர். கற்களை வைத்து இடம் பிடிக்க துவங்கினர். தகவலறிந்து சென்ற புன்செய் புளியம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், சமாதானம் அடையாமல் தொடர்ந்து இடத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்-டதால் பதற்றம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வந்த வருவாய்த்து-றையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 'சத்தி தாசில்தார் அலுவலகத்தில் ஏப்.,2ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என வருவாய்த்துறை-யினர் உறுதியளிக்கவே மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ