ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சப்-கலெக்டரிடம் மக்கள் மனு
ஆக்கிரமிப்பை அகற்ற கோரிசப்-கலெக்டரிடம் மக்கள் மனுகோபி, நவ. 6-கோபி அருகே பெரிய கொடிவேரி டவுன் பஞ்., சென்றாயம்பாளையம் கிராம மக்கள், 70க்கும் மேற்பட்டோர், கோபி சப்-கலெக்டர் ஆபீசில் நேற்று குவிந்தனர். சப்-கலெக்டர் சிவானந்தத்தை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில் அவர்கள் கூறியதாவது: சென்றாயம்பாளையம் கிராமத்தில், வசிக்கும் எங்களுக்கு, நத்தம் புறம்போக்கு நிலத்தில், 2012ல் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் எங்கள் பகுதியில், சம்பந்தமில்லாத நபர்கள் சாலையை வழிமறித்து குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இலவச வீட்டுமனை பட்டாவின் படி, அந்த நிலத்தை நில அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். சப்-கலெக்டர் சிவானந்தம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தெரிவித்தார்.