உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேகத்தடை கேட்டு மனு

வேகத்தடை கேட்டு மனு

ஈரோடு, ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், மா.கம்யூ., கட்சி தாலுகா கமிட்டி செயலர் பாலசுப்பிரமணி தலைமையில் மனு வழங்கி கூறியதாவது: ஈரோடு கூரப்பாளையம் கிராமத்துக்கு உட்பட்ட ஊனாத்திபுதுார் அருகே தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பள்ளி, கல்லுாரிகள் உள்ளதால், மாணவ, மாணவியர் அதிகம் வந்து செல்கின்றனர். இவ்விடத்தில் தொடர்ந்து விபத்து நடப்பதால், வேகத்தடை அமைக்க பல முறை மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இதன் பிறகும் அமைக்க தவறினால் வரும், 9ல் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !