உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி மாட்டிறைச்சி கூடத்தில் கட்டணத்தை குறைக்க கோரி மனு

மாநகராட்சி மாட்டிறைச்சி கூடத்தில் கட்டணத்தை குறைக்க கோரி மனு

ஈரோடு, ஈரோடு மாநகர மாட்டிறைச்சி வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:ஈரோட்டில் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறோம். வைராபாளையத்தில் கட்டப்பட்டுள்ள மாட்டிறைச்சி கூடத்தில் மாடுகளை கட்டி வைக்க இடவசதி, பாதுகாப்பு வசதி இல்லை. இச்சூழலில் மாட்டிறைச்சி கூடம் ஏலம் விடப்பட்டுள்ளது.ஏலம் எடுத்தவர்கள் ஒரு மாட்டுக்கு, 100 ரூபாய் வேண்டும் என கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றனர். ஒரு கிலோ கோழி இறைச்சி, 200 ரூபாய்க்கு விற்பனையாகும். ஒரு கோழிக்கு, 5 ரூபாய் பெறுகின்றனர். ஒரு கிலோ ஆட்டிறைச்சி, 800 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், 25 ரூபாய் வசூலிக்கின்றனர். மாட்டிறைச்சி கிலோ, 350 ரூபாய்க்கு விலை போகிறது.இற்கு கட்டணமாக, 100 ரூபாய் பெறுவதால் விற்பனையாளர்கள் சிரமப்படுகின்றனர். குத்தகை கட்டண தொகையை குறைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ