பி.எப்.,-இ.எஸ்.ஐ., குறைதீர் கூட்டம்
ஈரோடு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் இ.எஸ்.ஐ., சார்பில் பெருந்துறை சிப்காட் தொழில் துறை வளர்ச்சி மையத்தில், மாவட்ட விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் வரும், 27ல் நடக்கிறது. சந்தாதாரர்கள் காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி; தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை பங்கேற்கலாம்.வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். இத்தகவலை ஈரோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அமலாக்க அதிகாரி சரவணகுமார் தெரிவித்துள்ளார்.