உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம்

குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம்

ஈரோடு : கவுந்தப்பாடி அருகே ஆவாரங்காட்டூர் காலனி பகுதிக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால் மக்கள் கவுந்தப்பாடி நால்ரோடு பகுதியில், 15ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வினியோகம் செய்ய உறுதி அளித்தனர்.ஆய்வில் மின்னவேட்டுபாளையம் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, ஆவாரங்காட்டூர் காலனிக்கு குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.மேலும் மக்களின் வசதிக்காக ஆவாரங்காட்டூர் காலனியில் சிறு குடிநீர் தொட்டி கட்டி, புது குழாய்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலமாக, தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ