மேலும் செய்திகள்
காட்டுப்பாளையத்தில் 5,700 சவுக்கு மரக்கன்று நடவு
27-Sep-2025
கோபி, கோபி-சித்தோடு இடையில், 30.6 கி.மீ., தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், மரக்கன்று நடும் பணி தற்போது நடக்கிறது. கடந்த சில நாட்களாக குள்ளம்பாளையம் முதல் பிரதான ஈரோடு சாலை வழியில், சாலையின் இருபுறமும் புங்கன், பூவரசன், சொர்க்கம், பாதாம், மகிழம், வாகை, நீர்மருது உள்ளிட்ட ரக மரக்கன்றுகளை நடும் பணி நடக்கிறது. 'ஏற்கனவே சாலை இருபுறமும், 2,200 மரக்கன்றுகள் நடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் பராமரிக்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக, ௧,௦௦௦ மரக்கன்று நடும்பணி தற்போது நடக்கிறது' என்று, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
27-Sep-2025