உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பி.எம்.கிசான் பயனாளிகள் தனித்துவ அடையாள எண் பெற அழைப்பு

பி.எம்.கிசான் பயனாளிகள் தனித்துவ அடையாள எண் பெற அழைப்பு

ஈரோடு ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டம், 2019 பிப்., முதல் செயல்படுகிறது. 4 மாதத்துக்கு ஒரு முறை தலா, 2,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் விவசாய நிலம் வைத்துள்ள குடும்பங்களுக்கு, உதவித்தொகையாக விவசாயி வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது. மத்திய அரசின் இத்திட்ட பயனாளிகள், இத்தொகை பெற தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் பெற வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இந்த எண் பெறாமல், 17,146 பேர் உள்ளனர். இவர்கள், 21வது தவணையை நவம்பர் மாதத்தில் பெற, உடன் இந்த எண் பெற வேண்டும். அதற்காக விவசாயிகள், தங்கள் பகுதி வேளாண் அல்லது தோட்டக்கலை அலுவலர்களை அணுகி, அல்லது பொது சேவை மையம் மூலம், தங்கள் ஆதார் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணுடன் பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெறலாம்.முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள், தங்கள் பெயரில் சிட்டா பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து பெறலாம். அடையாள எண் பெற்றால் மட்டுமே, வேளாண் - உழவர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து பெற முடியும். இவ்வாறு தெரிவிதித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி