இளம்பெண் மீது போக்சோவில் வழக்கு
ஈரோடு: திருப்பூர் மாவட்டம் காங்கேயம், கோட்டை மாநகரை சேர்ந்த அன்புராஜ் மகள் வைஷ்ணவி, 19; பிளஸ் 1 வரை படித்துள்ளார். சமையல் தொழில் செய்து வருகிறார். ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுவனுக்கு ஆசை வார்த்தை காட்டி கடந்த செப்., மாதம் திருமணம் செய்துள்ளார். தகவலறிந்த குழந்தைகள் நலக்குழுவினர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.விசாரித்த போலீசார், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ என இரு பிரிவுகளில், வைஷ்ணவி மீது வழக்குப்பதிவு செய்தனர்.