உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு போக்சோ

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு போக்சோ

சத்தியமங்கலம், கோபி அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி பிளஸ் டூ முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த ஜூன் 21ல் வயிறு வலிப்பதாக தாயிடம் கூறியதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.விசாரணையில் கடந்த டிச., மாதம், அதே பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி தனபால்,21, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார். சிறுமியின் தாய் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். போலீசார் தனபாலை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி